நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் பேருந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு நிலவியது. கேரளாவிலிருந்து கோத்தகிரிக்கு வந்த அந்த சுற்றுலா பேருந்து மரலக்கம்பை பகுதியில் மேட்டில் ஏறாததால் ஓட்டுநர் அதிலிருந்தவர்களை இறக்கிவிட்டு பேருந்தை பின்னோக்கி இயக்கியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து அந்தரத்தில் தொங்கியது. ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.