திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே, காக்கா முட்டை திரைப்பட பாணியில் ரயில் பயணிகளிடம் குச்சியால் அடித்து செல்போன் பறித்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆம்பூர் அடுத்த கம்பிகொள்ளை பகுதியை சேர்ந்த 20 வயதான பரமேஷ் என்பவனை கைது செய்த போலீசார், பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.