முள் காட்டில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம். ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம். சிசிடிவி கேமராக்களை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். 2 குழந்தைகளின் தாயை கல்லால் அடித்து கொன்றது யார்? கொடூரத்தின் பின்னணி என்ன?* முள் காட்டில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்* செய்தது யார் என விசாரணை* சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர்பிப்ரவரி 10-ந் தேதி. ஈரோடு தாலுகா காவல்நிலையத்துக்கு ஒரு ஃபோன் கால் வந்துருக்கு. சார், ரங்கம்பாளையத்துல உள்ள முள் காட்டுல 25 வயசு மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நிர்வாணமான முறையில சடலமா கிடக்குறதா சொல்லிருக்காங்க. அடுத்து, சம்பவ இடத்துக்கு போன போலீஸ்காரங்க, அந்த சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. தலை, கை, கால் அந்தரங்க உறுப்புன்னு பல இடங்கள்ல ரணக்காயங்கள் இருந்ததால, கண்டிப்பா இது கொலைதாங்குறத உறுதி பண்ண போலீஸ், இளம்பெண் யாரு, அவங்கள யாரு இப்படி பண்ணதுன்னு கண்டுபிடிக்க தீவிர விசாரணையில இறங்குனாங்க. முதற்கட்டமா, அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி கேமராக்கள போலீஸ், ஒன்னுவிடாம செக் பண்ணாங்க. அதுலதான், இளம்பெண்ண கொலை செஞ்சது யாரு?ங்குறதும், கொலைக்கான காரணம் என்னங்குறதும் தெரியவந்துச்சு.* நர்மதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் * கணவனுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த நர்மதா* நர்மதாவை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார்* நர்மதாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணைபெருந்துறை பக்கத்துல உள்ள பிச்சாண்டாம்பாளையம் கிராமத்த சேர்ந்தவங்க 25 வயசான இளம்பெண் நர்மதா. இவங்களுக்கு கல்யாணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் இருக்காங்க. நர்மதா தன் கணவன்கூட அடிக்கடி சண்ட போட்டுட்டு வீட்டவிட்டு வெளியே போயிட்டு, நாலஞ்சு நாள் கழிச்சுதான் வீட்டுக்கு வருவாங்களாம். அப்படிதான், பிப்ரவரி 3ந் தேதி வீட்டவிட்டு வெளியே போன நர்மதா, கிட்டத்தட்ட அஞ்சு நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பல. அதனால, அவங்க பெற்றோர் போலீஸ்லையும் கம்ப்ளைண்ட் பண்ணிருந்துருக்காங்க. அந்த அடிப்படையில வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், நர்மதாவ தேடிட்டு வந்த சூழல, நர்மதா முள் காட்டு பகுதில இருந்து சடலமா மீட்கப்பட்டுருக்காங்க. * ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நர்மதா* இளம்பெண் நர்மதாவிடம் பேச்சு கொடுத்த தீபன்குமார்* நர்மதாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தீபன்குமார்பிப்ரவரி 3ந் தேதி வீட்டவிட்டு வெளியேறுன நர்மதா, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல நின்னுட்டு இருந்துருக்காங்க. அப்போ, அந்த வழியா வந்த திருநங்கை தீபன் குமார்ங்குறவன் அங்க நர்மதா நின்னுட்டு இருந்தத பாத்து அவனுக்கு காமவெறி தலைக்கு ஏறியிருக்கு. அந்த நேரம் பாத்து அங்க ஆள்நடமாட்டமே இல்லாம இருக்கவே, நர்மதாகிட்ட பேச்சு கொடுத்த தீபன்குமார், அவங்கள அடிச்சு உதச்சு மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போயிருக்கான். அங்க வச்சு நர்மதாவ பாலியல் வன்புணர்வு பண்ணிருக்கான். நர்மதா அதுக்கு ஒத்துக்காம தீபன்குமார் கூட மல்லுக்கட்டி, தன்னால முடிஞ்ச அளவுக்கு தற்காத்திருந்துருக்காங்க. * நர்மதாவின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை* காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை* திருநங்கை தீபன்குமாரை கைது செய்த போலீசார்ஆனா, நிதானத்துல இல்லாத தீபன்குமார், கீழ கிடந்த கருங்கல்லாலேயே நர்மதாவோட பின்னந்தலையில பலமா அடிச்சு அவங்கள மயக்கடைய வச்சிருக்கான். அதுக்கப்புறம், கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்ல, நர்மதாக்கிட்ட தன்னோட வக்கிர புத்திய காட்டி, சிதச்சு சின்னாபின்னமாக்கியிருக்கான். அதுக்கப்புறம், நர்மதாவின் சடலத்த, ரங்கம்பாளையத்துல உள்ள முள் காட்டில வீசிட்டு அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான் தீபன்குமார். விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, தீபன்குமார் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிருக்காங்க. Related Link மாமியாரை சாய்த்த மருமகன்