தென்காசி மாவட்டம் வடகரை கல்குளம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானை கூட்டத்தை ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கிய காட்டுயானைகள் கூட்டம் தென்காசி வடகரை கல்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டு இருந்தன. இதனால் விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்த வனத்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.