கோவை மாவட்டம் வால்பாறை அருகே நள்ளிரவில் தேனீர் கடைக்குள் புகுந்த யானை கூட்டம் துவம்சம் செய்தன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்ல முடி பூஞ்சோலை காட்சி முனை பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் நள்ளிரவு தேநீர் கடையின் கதவை உடைத்து, பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிட்டு நாற்காலி, டேபிள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி சென்றன.