கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள ஏரியில் யானைகள் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்ட வீடியோவை அவ்வழியாக சென்றவர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.