கோவை மாவட்டம் வால்பாறை அருகே பனிமேடு எஸ்டேட் பகுதியில், பகல் நேரங்களில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் மனம்பள்ளி வரச்சரகத்திற்கு உட்பட்ட பனிமேடு மற்றும் என்சி டிவிஷன் பகுதிகளில், சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளி ராஜகுமாரி என்பவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 16 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் பகல் நேரத்திலேயே உலா வருவதால், அச்சமடைந்துள்ள மக்கள் அவற்றை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.