கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். ஊடே துர்க்கம் வனப்பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட யானைகள் புதன்கிழமை அன்று சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன. பொதுமக்கள் விரட்டியும் அதே பகுதியில் தஞ்சமடைந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டினர். யானைகள் சாலையைக் கடக்கும்போது, வனத்துறையினர் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.