கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குள் புகுந்த காட்டு யானைகள் கதவுகளை இடித்து தள்ளி, பொருட்களை உடைத்து துவம்சம் செய்துள்ளன. 8 யானைகள் வந்ததாக கூறப்படும் நிலையில், வகுப்பறைகளில் சேர், டேபிள், ஸ்மார்ட் போர்டு, சத்துணவுக் கூடம் உள்ளிட்டவற்றை சூறையாடியுள்ளன. அச்சமூட்டும் யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.