தேனி போடி மெட்டு அருகே ஏலத் தோட்டத்தில் நுழைந்த யானைக்கூட்டதால் தோட்ட தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோண்டி மலையில் உள்ள ஏலத் தோட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான நிலக்கோட்ட பணியாளர்கள் வேலைக்கு வந்து செல்லும் நிலையில், நான்கிற்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடந்து ஏலத் தோட்டத்திற்குள் நுழைந்தன.