கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் புற்களை கூட அகற்றாமல், அவசர அவசரமாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பணிகளை தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.