சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே சாலையில் திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்லுர் கிராமத்தில் இருந்து கொம்மக்காடு கிராமத்திற்கு புறப்பட்ட அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலை நடுவே நின்றதால், மற்ற வாகனங்கள் எந்த பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.