செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்பவரின் மகள் ஷாலினி வண்டலூர் அருகே உள்ள தனியார் மருத்துவர் கல்லூரியில் BSc இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் சகமாணவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழக்கோட்டையூர் பகுதியில் பின்னால் வந்த அரசு மாநகர பேருந்து மோதியதில் ஷாலினி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.