சென்னை ஓஎம்ஆர் சாலையில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநரை, மற்ற வாகன ஓட்டிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் சரவணனிடம் முறையிட்ட போது அவர், மதுபோதையில் இருந்ததால் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீசார் ஓட்டுநர் சரவணனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.