விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டோல்கேட் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 17 பயணிகள் காயமடைந்தனர். மதுரை மாட்டுத்தாவானி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, விருதுநகர் எட்டுர்வட்டம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கண்டெனர் லாரி மீது மோதியது. அதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்து பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பயணிகளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.