கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார். பைக்கில் சென்று கொண்டிருந்த காரமடையை சேர்ந்த சுப்பிரமணியத்தை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக அவர் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியன் மீது, பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.