புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தும், புதுக்கோட்டை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.