தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு காதலி தலை மீது கல்லை போட்டு கொலை செய்த ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மணிமேகலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்ற பாலகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.