ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியை காதலித்த சிறுமி, பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லூரை சேர்ந்த நவமணி என்பவர் 15 வயது சிறுயை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நவமணி போக்சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர்ஜாமீனில் வெளியே வந்த நவமணியுடன் சிறுமி மீண்டும் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால் சிறுமி விபரீத முடிவை எடுத்தார்.