ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஆட்டோ ஏறியது தொடர்பான விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. சின்ன கடை தெரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஆட்டோ மோதியது. இதில், ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்ட சிறுமியின் மீது ஆட்டோவின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.