மா.நன்னனின் 102-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை முத்தமிழ் பேரவையில் நன்னன் குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், மேம்படுத்தப்பட்ட மா.நன்னன் இணையதளத்தை வெளியிட்டார்.