புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அமாவாசையையொட்டி, வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அம்மனுக்கு தேங்காயில் கற்பூரம் ஏற்றி திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.