கன்னியாகுமரி அருகே எரிவாயு நிறுவன உரிமையாளர் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட பெண், புகாரளிக்க சென்ற போது போலீசாரும் தற்கொலைக்கு தூண்டியதாக இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.கோட்டார் பகுதியை சேர்ந்த ஆஷா நாகர்கோவிலில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், அந்நிறுவன உரிமையாளர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருங்கி பழகி ஏமாற்றியதாகவும், இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகாரளித்த போது போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரும் வெளியேற்றியதால், மனமுடைந்த ஆஷா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.