திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 4பேரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். கொடைரோடு ரயில் நிலையம் பகுதியில் இராமலிங்கம் என்பவரது வீட்டில் அதிகாலையில் லாட்டரி சீட்டுகளை சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதாகவும், வெளிப்படையாகவே விற்பனை நடைபெறுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் 9ஆயிரத்து 18 லாட்டரி சீட்டுகளையும், சுமார் 35ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.