நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். போதை பழக்கத்தை நிறுத்திய பின்பும் போதை மாத்திரைகளை வாங்க வற்புறுத்துவதாக, பொத்தனூரைச் சேர்ந்த சிலர் மீது சங்கர் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் நல்லியம்பாளையத்தில் உள்ள மைதானத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.