அரியலூரில் பட்டப்பகலில் பேருந்துக்குள் புகுந்து இளைஞர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. கல்லாத்தூரிலிருந்து இறவாங்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் சிவக்குமார் நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டியில் மரத்தடியில் நின்றதாக தெரிகிறது. அப்போது மதுபோதையில் இருந்த இவரிடம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களும் மதுபோதையில் பேச்சு கொடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர்களை செல்போனில் சிவக்குமார் வீடியோ எடுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க பேருந்துக்குள் ஓடிய இளைஞரை கும்பல் விடாமல் துரத்தி சென்று தாக்கியது.