சென்னை போரூர் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த நரிக்குறவ பெண்ணை பைக்கில் வந்த ஒருவர் கட்டையால் அடித்து மண்டையை உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதநந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ராதா என்ற நரிக்குறவ பெண் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ராதாவின் தலையில் அரிசி மூட்டையை தூக்கி போட்டதோடு கட்டை ஒன்றால் தலையில் தாக்கினார். இதில் தலையில் 13 தையல்கள் போடப்பட்டு நரிக்குறவ பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பைக்கில் வந்த நபர் யார்? தாக்கியதற்கான காரணம் என்ன என்பதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.