கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த மாவட்டங்களில் பெய்த மழையால் வெள்ளாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.