திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, எல்லப்பநாயுடு பேட்டை - புதூர் இடையிலான தரைப்பாலம் மூழ்கியதால் நான்கு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எல்லப்பநாயுடு பேட்டை, குன்னவாளம், குப்பத்துபாளையம், ஈண்ரம்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், திருவள்ளூர் மற்றும் கனகம்மா சத்திரம் பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் 3 மாதங்கள் வரை தரைப்பாலம் மூழ்கி பாதிக்கப்படுவதால், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து, 1500 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.