கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் தன்னுடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பூக்களை பறிப்பதற்கு வயலுக்கு சென்றபோது, பக்கத்து நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை வயலுக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.