கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். பல 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு அருகே அடர்ந்த காடுகளில் உள்ள மரம் மற்றும் செடிக்கொடிக்கள் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவி வருகிறது. இதனால், அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.