கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கும் மாநகராட்சிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் உள்ள 4 குடோன்களில், குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் காலையில் நடைபெற்று வந்தன. அப்போது, ஒரு குடோனில தீப்பற்றியதால் கரும்புகை சூழ்ந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.