சென்னை மூலக்கடையில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.