நாகை அருகே மூதாட்டி உணவு சமைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்த 4 வீடுகள் பற்றி எரிந்து தீக்கிரையாகின. காமேஸ்வரம் மீனவர் காலனியை சேர்ந்த செல்லம்மாள் தனது கூரை வீட்டில் உணவு சமைத்தபோது எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதனால் அலறியடித்து அவர் வெளியே ஓடி வந்த நிலையில் காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த செல்வம், காந்தி, சிலம்பாத்தாள் ஆகிய 3 பேரின் வீடுகளும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்து பெண்கள் கத்திக்கதறி கண்ணீர் வடித்தனர்.