திருப்பூர் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.