வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடும்ப பிரச்னை காரணமாக தனியார் கல்லூரி பெண் பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேல்பட்டி நாவிதம்பட்டியை சேர்ந்த டில்லிபாபு மகள் அம்ரிஷா, வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், பெற்றோருடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.