கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தந்தையின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் மீது, அதே ஆட்டோ ஏறி இறங்கியதில் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் தனது மகன் ரோகித்தை பள்ளிக்கு அழைத்து சென்றபோது, ஓட்டுநர் சீட்டில் இருந்த தந்தைக்கு ஆசையாக முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மண் மேடு இருப்பதை முருகவேல் கவனிக்காத நிலையில், அதன் மீது ஆட்டோ ஏறியதில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினான். பலத்த காயமடைந்த ரோகித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.