விடிந்தும் விடியாமலும் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பெயிண்டர். அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மனைவி. மனைவி உயிரிழந்ததும் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன கொடூரன். கட்டிய மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? தப்பி ஓடிய கணவன் பிடிபட்டாரா?வீட்டிற்குள் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்த ரூபாபெயிண்டர் வேலை பாக்குற கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு போய்ருந்துருக்காரு. மனைவி ரூபா மட்டும் வீட்டுல இருக்க, ரெண்டு பசங்களும் அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருந்துருக்காங்க. அந்த நேரம் பாத்து, தற்செயலா சொந்தக்காரங்க சிலர் ரூபாவ, பாக்க வந்திருக்காங்க. வாசல்ல நின்னு ரூபா, ரூபான்னு கூப்டுருக்காங்க. ஆனா வீட்டுக்குள்ள இருந்து எந்த சத்தமும் வரல. அதனால, சந்தேகப்பட்டு உள்ள போய் பாத்துருக்காங்க சொந்தக்காரங்க. அப்ப, வீட்டுக்குள்ள ரூபா, ரத்த வெள்ளத்துல மூச்சு பேச்சு இல்லாம கிடந்துருக்காங்க. அத பாத்ததும் அதிர்ச்சியானவங்க, உடனே அக்கம் பக்கத்துல உள்ளவங்க உதவியோட, ரூபாவ மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனாங்க. அவங்கள பரிசோதனை பண்ண டாக்டர்கள், ரூபா ஏற்கெனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. Related Link மண்டையோடாக மாறிய கணவன் கார்த்திக் காணாமல் போனதால் உறவினர்கள் சந்தேகம்ரூபாவுக்கு என்னாச்சு, அவங்கள யார் இப்படி பண்ணதுன்னு சொந்தக்காரங்கலாம் குழம்பி போய்ருந்தாங்க. ரூபா கொலை செய்யப்பட்ட விஷயத்த கணவர் கார்த்திக்கு சொல்லலாம்னு நினச்சு அவருக்கு ஃபோன் பண்ணி பாத்தா, செல்போன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. அவரு வேலை செய்ற இடத்துக்கு ஆள அனுப்பி விசாரிச்சா, கார்த்திக் காலையில இருந்தே வேலைக்கு வரலன்னு சொல்லியிருக்காங்க. பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சும் எந்த தகவலும் இல்ல. அப்பதான், ரூபாவோட மரணத்துக்கும், கணவன் கார்த்திக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு சொந்தக்காரங்க சந்தேகப்பட்டுருக்காங்க. விஷயம் தெரிஞ்சு ஹாஸ்பிட்டலுக்கு வந்த போலீஸும், ரூபாவோட கணவன் கார்த்திக்க பத்தி விசாரிச்சிட்டு இருந்தப்போ, ரூபாவோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் வந்துருக்கு. அதுல, அவங்கள கழுத்த நெரிச்சு கத்தியால குத்துனதாலதான் அவங்க உயிர் பறிபோய்ருக்குன்னு குறிப்பிடப்பட்டிருந்துச்சு. அப்ப, கார்த்திக்தான் கண்டிப்பா ரூபாவ கொன்னுருக்கான்னு சொந்தக்காரங்க உறுதியா சொல்ல, மனைவிய கணவனே எதுக்கு கொலை செய்யணும்னு போலீஸ் விசாரிச்சப்பதான் எல்லா விஷயமும் தெரியவந்துருக்கு.ரூபா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் தகராறுகிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டைல உள்ள குஞ்சிகிரிபாளையத்த சேர்ந்த கார்த்திக்கும், ரூபாவுக்கும் கல்யாணமாகி 14 வயசுல ஒரு மகளும், 12 வயசுல ஒரு மகனும் இருக்காங்க. பெயிண்டர் வேலைக்கு போய் குடும்பத்த கவனிச்சிட்டு வந்துருக்காரு கார்த்திக். நல்லபடியா போய்ட்டு இருந்த இவங்க வாழ்க்கையில, செல்போன்னால மிகப்பெரிய பிரச்சினை வந்திருக்கு. ரூபா, எப்ப பாத்தாலும் செல்போனும் கையுமாவே இருந்ததா சொல்லப்படுது. புருஷன் பிள்ளைகள கூட சரியா கவனிக்காம, காலையில இருந்து நைட் வரைக்கும் செல்போன்ல பேசிட்டே இருந்துருக்காங்க, இல்லன்னா மெசேஜ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. இது, கணவன் கார்த்திக்கு கோவத்தோட சேத்து சந்தேகத்தையும் உண்டாக்கியிருக்கு. Related Link மருமகனே செய்த பயங்கரம் மனைவி ரூபா செல்போன் பயன்படுத்தியதால் சந்தேகம்கார்த்திக் பலமுறை சத்தம் போட்டுருக்காரு. ஆனாலும், ரூபா அத கண்டுக்காம இருந்துருக்காங்க. மது போதைக்கு அடிமையான கார்த்திக், தெனமும் மது குடிச்சிட்டு வந்து மனைவியையும், பிள்ளைகளையும் போட்டு அடிச்சு துன்புறுத்திட்டு இருந்துருக்காரு. அப்பப்ப சின்ன சின்ன சண்டையா ஏற்பட்டுட்டு இருந்தது, ஒருநாள் மிகப்பெரிய பூதாகரமா வெடிச்சிருக்கு. சம்பவத்தன்னைக்கு காலையில கார்த்தி வேலைக்கு கிளம்பிட்டு இருந்தப்ப, ரூபா, ஃபோனே கதின்னு இருந்ததா சொல்லப்படுது. செல்போன்ல அப்படி என்னதான் இருக்கு, யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு கணவன் கேட்க, அது ஒன்னுமில்லன்னு சொல்லிருக்காங்க ரூபா. அப்ப ரெண்டு பேத்துக்கும் இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. Related Link இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவுதிடீர்னு ஆவேசமடைஞ்ச கார்த்தி, மனைவி கழுத்த நெரிச்சு சரமாரியா அடிச்சது மட்டுமில்லாம, வீட்டுல இருந்த கத்தியால அவங்கள சரமாரியா குத்திருக்காரு. அதுல, ரூபாவுக்கு அதிகபடியான ரத்தம் வெளியேறி கொஞ்ச நேரத்துலேயே துடிதுடிச்சு உயிரிழந்துட்டாங்க. ரூபா, இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் பயத்துலயும் பதற்றத்துலயும் கார்த்திக், அங்க இருந்து தப்பிச்சு போன விஷயம் விசாரணையில தெரியவந்துச்சு. அடுத்து, கொலை வழக்குபதிவு பண்ண போலீஸ், மனைவிய கொலை பண்ணிட்டு தலைமறைவா இருந்த கார்த்திக்க மடக்கி பிடிச்சு ஜெயில்ல அடைச்சிட்டாங்க. இந்த சம்பவம் நடந்தது 2021 அக்டோபர் 21. கிருஷ்ணகிரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்துல நடந்து வந்த இந்த கேஸ்ல கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறம், கொலையாளி கார்த்திக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுருக்குது.