செங்கல்பட்டு... வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன். பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம். மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீஸ். விசாரணையில் வெளிவந்த பேரதிர்ச்சி. நடந்தது என்ன?வீட்டு வாசல்ல, தலையில ரத்த காயத்தோட இருந்த மகன பாத்ததும் பெத்தவங்க துடிதுடிச்சுப் போய்ருக்காங்க. அதுக்கப்புறம் அக்கம் பக்கத்துல உள்ளவங்க உதவியோட இளைஞர மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க. ஆனா, அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துட்டாரு. இந்த சம்பவம் தொடர்பா மர்ம மரணம்னு வழக்குப்பதிவு பண்ணி போலீஸ் விசாரணை நடத்திட்டு இருந்த நேரத்துலதான், போலீஸுக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடச்சிருக்கு. செங்கல்பட்டு பக்கத்துல உள்ள பெருந்தண்டலத்துல உள்ள ஓவர்டன் பேட்டை பகுதிய சேர்ந்தவர் 50 வயசான ஜான்சன். இவரோட மகன் பேரு வெஸ்லி. 29 வயசான வெஸ்லி, ஒழுங்கா எந்த வேலைக்கும் போகாம, எந்நேரமும் குடியும் கூத்துமாவே இருந்ததா சொல்லப்படுது. தெனமும் நைட் கஞ்சா போதையிலையும், மதுபோதையிலும் வீட்டுக்கு வரதையே வழக்கமா வச்சிருந்த வெஸ்லி, வீட்டுக்கு வந்தோமா, அமைதியா படுத்து தூங்குனோமான்னு இல்லாம, பெத்தவங்க கிட்ட தெனமும் தகராறு பண்ணி டார்ச்சர் பண்ணதா சொல்லப்படுது.அம்மா, அப்பாவுக்கு, தான் சம்பாதிச்ச பணத்த கொடுக்காம, மது குடிக்கிறதுக்கு காசு கேட்டு, பெத்தவங்கள அடிச்சு உதச்சு துன்புறுத்திட்டு இருந்ததாவும் சொல்லப்படுது. எனக்கு வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னால வேலை பாத்து சம்பாதிக்க முடியாது, குடிப்பழக்கத்த விட்டுட்டு வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கிற வழிய பாரு, நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்க வேண்டாம், குறைஞ்சபட்சம் உன்ன நீ பாத்துக்குற அளவுக்கு சம்பாதிச்சா போதும்னு தந்தை ஜான்சன், மகன் வெஸ்லிக்கு அட்வைஸ் பண்ணி எவ்வளவோ போராடிருக்காரு. ஆனா, எந்த அறிவுரையும் வெஸ்லி மனசல மாத்தல.இதுக்கு நடுவுல, மகன் வெஸ்லிக்கும் அதே பகுதிய சேர்ந்த பொண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்தோட நிச்சியதார்த்தம் செய்ய ஏற்பாடு நடந்துருக்குது. இந்த சூழல, வெஸ்லிக்கு கஞ்சா பழக்கமும், குடிப்பழக்கமும் இருக்குற விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, இந்த நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள நிறுத்திருக்காங்க. நமக்கு குடிப்பழக்கம் இருக்குன்னு அப்பா ஜான்சந்தான் பெண் வீட்டுல உள்ளவங்ககிட்ட சொல்லிருப்பாருன்னு நினைச்ச வெஸ்லி, அன்னைக்கு நைட்டு குடிச்சிட்டு வந்து தந்தை ஜான்சன்கிட்ட சண்ட போட்டிருக்காரு. இப்படியே, அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில மோதல் அதிகமாகிருக்கு. தெனமும் குடிச்சிட்டு வந்து கண்டபடி பேசி, வயசானவங்கன்னு கூட பாக்காம இப்படி கை நீட்டுறியேன்னு ஜான்சன் ஆதங்கத்தோட கேட்டுருக்காரு.ஆனா, அப்பவும் அடங்காத வெஸ்லி தொடர்ந்து ரகளை பண்ணிட்டு இருந்துருக்காரு. ஒருகட்டத்துல, பொறுமை இழந்த தந்தை ஜான்சன், மகன் வெஸ்லிய கீழ தள்ளிவிட்டுட்டு, இரும்பு கம்பியால சரமாரியா அடிச்சி போட்டுட்டு, வீட்டுக்குள்ள போய் படுத்து தூங்கிருக்காரு. மறுநாள் காலையில எழுந்துருச்சு பாத்தப்போதான், வாசல்ல மகன் வெஸ்லி ரத்த வெள்ளத்துல கிடந்திருக்காரு. அத பாத்த, தந்தை ஜான்சனும் அவரோட மனைவியும் பக்கத்துல உள்ள கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனாங்க. ஆனா, அங்க வெஸ்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துட்டாரு.மதுபோதையில வீட்டுக்கு வந்தப்போ வெஸ்லி கால் தவறி கீழ விழுந்துருக்கலாம்னு போலீஸ் மொதல சந்தேகப்பட்டாங்க. ஆனா, முகத்துல பல இடங்கள்ல சரமாரியா அடிச்சதுக்கான ரத்தக்காயங்கள் இருந்ததால, கண்டிப்பா யாரோ அவர அடிச்சிருக்காங்கன்னு மருத்துவர்கள் உறுதிப்படுத்திருக்காங்க. யாரு அடிச்சாங்க, என்ன நடந்துச்சுன்னு தெரியாம போலீஸ் குழம்பிட்டு இருந்தப்போ தான், வெஸ்லியோட உறவினர் ஒருத்தரு போலீஸ்கிட்ட ஒரு விஷயத்த சொன்னாரு. கடந்த சில நாட்களாகவே வெஸ்லி தெனமும் குடிச்சிட்டு வந்து வீட்டுல பயங்கரமா ரகளை பண்ணிட்டு இருந்தாரு, அதனால அவங்க அப்பாவுக்கும், வெஸ்லிக்கும் தெனமும் சண்டை நடந்துட்டு இருந்துச்சு, எனக்கு என்னமோ ஜான்சன் மேலதான் சந்தேகமா இருக்குன்னு போலீஸ்கிட்ட சொல்லிருக்காரு.அதுக்கப்புறம், ஜான்சன ஸ்டேஷனுக்கு கூப்டு போய் போலீஸ் விசாரணை நடத்துனாங்க. முதல தனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி சமாளிச்சாலும், போலீஸோட அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, ஜான்சன் நான் தான் மகன கம்பியால அடிச்சு கொலை பண்ணன்னு ஒத்துக்கிட்டாரு. ஒழுங்கா வேலைக்கு போகாம, தெனமும் குடிச்சிட்டுவந்து, என்னையும் என் மனைவியையும் அடிச்சு கொடுமைப்படுத்துனான், அதான் ஆத்திரம் தாங்காம கோவத்துல அடிச்சிட்டேன்னு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.