கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் ப்ரோமோஷன் செய்ய வைத்து, ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி இருக்கிறாரா? என்ற பெயரில் இன்ஸ்டாவில் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வரும் ராயக்கோட்டையை சேர்ந்த பாலாஜி மற்றும் கோவிந்தராஜை தொடர்புகொண்ட சிலர், ஆன்லைனில் பட்டாசு விற்பது தொடர்பாக பாண்டியன் கிராக்கர்ஸ் பட்டாசு கடை பெயரில் இன்ஸ்டாவில் விளம்பரம் பதிவிடுமாறு கூறி அதற்கான செலவு தொகையையும் கொடுத்துள்ளனர். இவர்களும் கண்டெண்ட் தயார் செய்து வீடியோ எடுத்து வெளியிட, அதனை நம்பி ஏராளமான பாளோவர்ஸ், தீபாவளிக்கு பட்டாசு வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.