பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலை உப்போடை பகுதியில், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். உப்போடை திருச்செல்வம் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், சித்த மருத்துவம் தொடர்புடைய படிப்பு படித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில், வசமாக சிக்கினார்.