திருவள்ளூர் மாவட்டம பெரியபாளையம் அருகே குடிபோதையில் வாகன ஓட்டிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை ஒரு மணி நேரம் போராடி போலீஸார் மடக்கி பிடித்தனர். ராளப்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர், மதுபோதையில் கட்டை மற்றும் கத்தியை கொண்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை மிரட்டியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தார். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றதும் அந்த இளைஞர் கட்டத்தின் மீது ஏறி, அருகில் உள்ள புதரில் மறைந்து கொண்டார். இதனையடுத்து அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் பிடித்து தூக்கி சென்றனர்.இதையும் படியுங்கள் : பூம்புகார் கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை கற்சிலை... 4 அடிஉயரமுள்ள வெள்ளை கற்சிலையை மீட்ட இளைஞர்கள்