கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாமியரின் கையை அரிவாளால் வெட்டி துண்டாக்கிய மருமகனை போலீஸார் கைது செய்தனர். கோபாலபுரம் நெடும்பாறையை சேர்ந்த ரவி என்பவருக்கும், அவரது மனைவி நந்தினிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்ற நந்தினி, தாயுடன் தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது. ஏற்பட்ட தகராறில்,மது போதையில் இருந்த மருமகன், தடுக்க வந்த மாமியாரின் கையை அரிவாளால் ஒரே வெட்டாக வெட்டி துண்டாக்கியதாக கூறப்படுகிறது.