சென்னையை அடுத்த ஐயப்பன் தாங்கலில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐயப்பன் தாங்கல் சீனிவாசபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளைஞர்கள் மணிகண்டன், ருத்ரன் மற்றும் சிலர், 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நாளை மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ருத்ரனை மணிகண்டன் கத்தியால் குத்தி கொலை செய்தார். அந்த வழக்கில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.