கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பைக் திருடி சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த போதை ஆசாமி கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் வீட்டின் முன் தனது பைக்கை சாவியுடன் நிறுத்தி சென்ற நிலையில் அங்கு வந்த போதை ஆசாமி பைக்கை திருடி சென்றார். இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கருங்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.