மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டி கிராமத்தில், ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 40க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் 10 இரட்டை மாட்டு வண்டிகளும், சின்னமாடு பிரிவில் 32 இரட்டை மாட்டு வண்டிகளும் கலந்துக் கொண்டு சீறிப் பாய்ந்தன. உறங்கான்பட்டி - மேலூர் சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தை, சாலையின் இருபுறமும் திரண்டு ஏராளமானோர் கண்டு களித்தனர்.