நெல்லை மேலப்பாளையத்தில் பிறந்த இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை கவ்வி சென்ற நாயிடமிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. மேலநத்தம் தளவாய் கோவில் பகுதி அருகே நாய் ஒன்று வாயில் பொட்டலத்தை கவ்வி வருவதை கண்ட மக்கள் நாயை பிடிக்க முயன்ற போது அது பொட்டலத்தை கீழே போட்டு விட்டு ஓடியது. பொட்டலத்தை திறந்து பார்த்த பொதுமக்கள், அதில் ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை