ஆன்லைன் கேமில் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், மருத்துவர் ஒருவர் காருக்குள் தனக்கு தானே விஷத்தை செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ஜோஸ்வா சாம்ராஜ் என்பவர் சேலத்தில் உள்ள காவேரி மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர், கடந்த மூன்று மாதங்களாக ஆன்லைன் மூலம் லூடோ விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.. ஆன்லைன் விளையாட்டில் ஆறு லட்சம் ரூபாய் இழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மனஉளைச்சலில் இருந்த சாம்ராஜ், கொடைக்கானல் அருகே பூம்பாறை என்ற இடத்தில் காருக்குள் அமர்ந்தபடி உடலில் விஷம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.