கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையத்தில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகர் பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் முழுமையாக முடிவடையாததால் மூடப்படாமல் உள்ளது. கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பள்ளத்தில் தவறியும் விழுந்துள்ளார். இதனால் ஆபத்தான வகையில் திறந்து கிடக்கும் பள்ளத்தை மூடக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.