திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே வீட்டில் வளர்க்கும் நாய் குரைத்ததில் ஏற்பட்ட தகராறில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் என்பவர் வளர்த்து வரும் நாய், அந்த வழியாக சென்ற நெய் கிருஷ்ணன் என்பவரை பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது.